இராகலையில் முதலாம் பிரிவில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக ஐந்து பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். இந்த சமத்துவம் தொடர்பில் இரைகலை பொலிஸாரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதனடிப்படையில் பொலிஸார் கடந்த 25 ம் திகதி சந்தேக நபர் ஒருவரை கைது செய்தனர். மேலும் அவரை 14 நாட்கள் விளமறியலில் வைக்க வலப்பனை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் நான்கு நாட்கள் விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். அதன்போது விபத்தில் உயிர் தப்பிய தங்கையா ரவீந்திரனை இராகலை பொலிஸார் கடந்த இரண்டு தினமாக விசாரித்து வந்தனர்.
அதன் படி குறித்த நபர் சில உண்மைகளை தெரிவித்தார். இரவீந்திரன் சம்பவம் இடம்பெற்ற தினத்தில் இராகலை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் வாங்கியுள்ளமை பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், வீடு தீப்பற்றி எரிந்த போது அணைக்க வந்த மக்களிடம் வீட்டில் யாரும் இல்லையென பொய் கூறியதாகவும் பொலிஸாருக்கு கிடைக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து விளக்கமறியலில் இருந்த ரவீந்திரனை பொலிஸார் கைது செய்தனர்.
முன்னதாக குறித்த நபர் மீது சுமத்தப்பட்ட குற்றங்களின் அடிப்படையில் அவரை வலப்பனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.