கடந்த சில தினங்களாக மணெண்ணெய் அடுப்பின் வியாபாரம் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
நாட்டில் சமையல் எரிவாயுவின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இதன் எதிரொலியாக மக்கள் அதிகம் செறிந்து வாழும் பகுதிகளில் தற்போது மக்கள் மண்ணெணெய் அடுப்பினை கொள்வனவு செய்து வருவது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்து இரு தினங்களாக புறக்கோட்டை வர்த்தக நிலையத்தில் மண்ணெணெய் அடுப்பு விற்பனை அதிகரித்துள்ளதாக புறக்கோட்டை ஐக்கிய தேசிய சுயதொழில் வர்த்தகர் சங்கம் தெரிவித்துள்ளது.