மக்கள் விடுதலை முன்னணி மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்ககோரும் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பு இன்று பிற்பகல் 2.00 மணியளவில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெறவுள்ளதாக தெரிகிறது.
மக்கள் விடுதலை முன்னணி சார்பில், அக்கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜித்த ஹேரத், சுனில் ஹத்துனெத்தி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸவுடன் மக்கள் விடுதலை முன்னணி பேச்சுக்களை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.