நாம் அனைவரும் நம் தொலைபேசி எண்ணை வேறோரு வலையமைப்பிற்கு மாற்றும் போது நாம் முதல் பாவித்த எண்ணையே எடுக்க முடியாது மிகவும் அவதிப்படுவோம்.
அனைத்து தொலைபேசி சேவைகளின் எண்களையும் பாவனையாளர்கள் தனக்கு பிடித்த தொலைபேசி சேவை வலையமைப்பிற்கு மாற்றுவதற்கான அனுமதி சட்ட பூர்வமாக கிடைக்கப்பெற்றுள்ளது என தொலைதொடர்புகள் ஒழுங்குபடுதல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளது.
நேற்று ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்விடையம் தெரிவிக்கப்பட்டது.