நாட்டில் கோவிட் மரணங்களை தொடர்ந்தும் குறைப்பதற்கு எடுக்க கூடிய நடவடிக்கை தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்று கோவிட் தடுப்பு விசேட செயலணியுடன் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கொவிட் தொற்றாளர்கள் மேலும் அடையாளம் காணப்படும் பிரதேசங்கள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என ஜனாதிபதி இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் இடங்களை தனிமைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடுகளை எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்க வேண்டும் என ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.