web log free
January 12, 2025

முல்லைத்தீவில் கடல்வழி போராட்டம்

இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து கடல் வழியான படகு போராட்டமானது சற்றுமுன்னர் ஆரம்பாகியுள்ளது.

இந்த மீனவர்களின் போராட்டமானது இன்று 17.10.2021 முல்லைத்தீவில் இருந்து பருத்தித்துறை வரை கடல் வழியான படகு பேரணி முன்னெடுக்கப்படுகிறது.

இந்த போராட்டத்தில் , வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ளஸ், எம்.பி சிவஞானம் சிறீதரன், எம்.பி சாணக்கியன் உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.   

கடல் வளத்தினையும்,நீரியல் வளத்தினையும் மிகமோசமாக அழிக்கும் இழுபை படகுகளை தடைசெய்யும் 11 ஆம் இலக்க சட்டம் 2017 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டுள்ளது. எனினும் இந்த சட்டத்தை அமுல்படுத்தாத காரணத்தினால் இழுவைப்படகுகள் தொடர்ச்சியாக கடல்வளத்தினை அழிக்கும் நிலமை தொடர்ந்துவருகின்றது.

இதனை முறையாக அமுல்படுத்த இலங்கையின் கடற்தொழில் நீரியல் வளத்துறை அமைச்சரை கோரிக்கை விடுக்கும் முகமாகவே இந்த கடல்வழி படகு பேரணி இடம்பெறுகிறது.

மேலு இந்த படகு பேரணிக்கு அரசியல் கட்சிகள் பல்வேறு அமைப்புக்கள் ஆதரவு வழங்கி அழைப்பு விடுத்திருந்தனர். இந்நிலையில் குறித்த மீனவர் பேரணியில் மீனவர்களுடன் அரசியல் பிரமுகர்களும் இணைந்துள்ளனர்.

Last modified on Sunday, 17 October 2021 05:56
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd