யாழ்.கொக்குவில் பகுதியில் 13 வயதான சிறுமி வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட குற்றச்சாட்டில் ஸ்ரூடியோ உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரின் மனைவியும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்களின் நடவடிக்கையால் ஸ்ரூடியோ உரிமையாளரின் மனைவி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவரும் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தன்னை வன்புணர்ந்ததாக சிறுமி ஒருவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் ஸ்ரூடியோ உரிமையாளர் கடந்தவாரம் கைதுசெய்யப்பட்டு 27ம் திகதிவரை விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை கடந்த ஒன்றரை வருடங்களாக குறித்த நபர் தன்னை பல தடவைகள் வன்புணர்ந்ததாக சிறுமி வாக்குமூலம் வழங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட சிறுமி சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் சந்தேக நபரினால் சிறுமியின் ஒளிப்படங்கள் சில சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டு வழக்கு நடவடிக்கைகள் சந்தேக நபருக்கு சாதகமாக மாற்றப்படவுள்ளமை தொடர்பில் கண்டறிந்தனர்.
இதனையடுத்து அந்த ஒளிப்படங்களை வைத்திருந்தவர்கள் தொடர்பில் யாழ்.பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
அதுதொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சந்தேக நபரின் மனைவியை கைது செய்ததுடன் மற்றொருவரிடம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் அவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.