web log free
April 06, 2026

அடிக்கடி மின் தடை ஏற்படலாம்

தற்போது நிலவும் வானிலை காரணமாக மின்சார விவிநியோகத் தடையை அமுல்படுத்த நேரிடும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்த அமைச்சின் மின்சாரத்துறை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு, இதனை ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கின்றார்.

நீர்மின்சார உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான நீர்மட்டம் உயர்வடையும்வரை மின்சார விநியோகத் தடை அமுல்படுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தற்போது, நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் பாரிய அளவில் குறைவடைந்துள்ளதாகவும், மின்சாரத்துறை பொறியியலாளர் சங்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd