web log free
January 12, 2025

பாடசாலை சேவை வாகனங்களுக்கான அறிவித்தல்

இன்று முதல் நாடளாவிய ரீதியில் 200 மாணவர்களுக்கும் குறைவான பாடசாலைகள் ஆரம்பமாகியுள்ள நிலையில் பாடசாலை சேவையில் ஈடுபடும் ஆட்டோ மற்றும் வான் ஆகியவற்றை பரிசோதிக்கும் நடவடிக்கைமேற்கொள்ளப்படவுள்ளது.

அதன்படி முச்சக்கர வண்டியில் இருவருக்கு மாத்திரமே பயணிக்க முடியும் என்றும் இதேபோன்று இதர வாகனங்களில் ஆசன எண்ணிக்கைக்கு ஏற்றவாறு பயணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதோடு நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூடுதலான மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

வாகனங்களில் பயணிக்கும் மாணவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து இருப்பது அவசியமம் என்பதுடன், சுகாதார வழிமுறைகளையும் பின்பற்றுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

 
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd