சில தினங்களுக்கு முன் இறந்ததாக சந்தேகிக்கப்படும் கைக்குழந்தையின் சடலம் சிலாபம்-இரணைவில கடற்கரையில் 21 ஆம் திகதி காலையில் கரையொதுங்கியது.
இரணைவில பகுதியைச் சேர்ந்த ஒருவர் முதலில் சடலத்தைக் கண்டு சிலாபம் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
இறந்த சிறுமி 18 ஆம் திகதி காணாமல்போன நீர்கொழும்பு, துங்கல்பிட்டியைச் சேர்ந்த தமாஷா ரோசெல்லி (2 வயது) என அடையாளம் காணப்பட்டார்.
18 ம் திகதி மாலை 5.00 மணியளவில் தங்கள் மகள் காணாமல் போனதாக அவரது பெற்றோர் துங்கல்பிட்டி பொலிசில் புகார் அளித்துள்ளனர்.
சிறுமி காணாமல் போனபோது டெனிம் ஷார்ட்ஸ் மற்றும் வெள்ளை டி-ஷர்ட் அணிந்திருந்தார்.
உடல் அடையாளம் காண முடியாத அளவுக்கு மாறிவிட்டது மற்றும் உடலின் சில பாகங்கள் காணவில்லை. சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.