web log free
May 22, 2024

நனோ தொழிநுட்பம் பற்றிய அறிமுக பார்வை

மிகவும் பரபரப்பா சுழன்று கொண்டிருக்கும் இந்த நவீன மயமான உலகில் என்ன என்னவோ புதுமையென்று வாயை பிளந்து பார்க்கும் பல விடையங்கள் நடைபெறுகிறது.

ரொக்கெட் இல்லாமல் நிலவுக்கு போகலாமாம்! துர்நாற்றம் இல்லாமல் காலுறை அதாவது socks பயன்படுத்தலாமாம்! இது எல்லாம் சாத்தியமாகுமா?? இந்த கேள்வி நம்மில் பலருக்கு எழுந்திருக்கும். அதற்கான பதில் தான் Nanotechnology அதாவது நனோ தொழில்நுட்பம்.

அதி வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பம் தான் நனோ தொழில்நுட்பம். இதனை ரிச்சர்ட் ஃபைமன் அறிமுகப்படுத்தியுள்ளார். நனோ என்ற சொல் கிரேக்க மொழியில் இருந்து எடுக்கப்பட்டது. இதற்கு மிக மிக சிறியது என அர்த்தம்.

நனோ தொழில்நுட்பத்தின் விஞ்ஞான குறியீடு 10^-9m ஆகும். இதனை நாம் புரியும்படி கூறினோமானால், நம் தலைமுடியை 100000 தடவைகள் உடைக்கும் போது இறுதியில் கிடைக்கும் சிறிய பகுதியே நனோ ஆகும். அது நம் DNA அளவில் இருக்கும்.

நனோ தொழில்நுட்பத்தினுள் அடங்கும் பொருட்கள் எல்லாம் 1- 100 நனோ மீட்டருக்கு இடையிலே இருக்கும். அவ்வாறு இருந்தால் மட்டுமே அது நனோ தொழில்நுட்பம் என்பர்.

இவ்வாறு 1- 100 நனோ மீட்டருக்கு பொருட்களை 2 முறைகளில் உருவாக்கலாம். முதலாவது, Top Down Approach, அதாவது பெரிய பொருட்களை உடைத்து 1-100 Nm ல் கொண்டு வருதல். அதனை கல்லை கொண்டு சிலை செதுக்குவது போல் எனக்கொள்ளலாம். இரண்டாவது, Bottom Up Approach, அதாவது சிறு சிறு அணுத் துகள்களை ஒன்று சேர்த்து 1-100 Nm ல் கொண்டு வருதல். அதனை மண்ணால் சிலை வடிப்பது போல் எனக்கொள்ளலாம்.

இது போன்று பல சுவாரஸ்யமான விடையங்கள் நனோ தொழில்நுட்பத்தில் நாம் தெரிந்துக்கொள்ள உள்ளது. இது நனோ தொழில்நுட்பத்தின் அறிமுகம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.