எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த நனோ நைட்ரஜன் உரம் குறித்து விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவிடம் நாடாளுமன்றத்தில் நேற்று (21) கேள்வி எழுப்பினார்.
பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் சமன் தர்மகீர்த்தி நடத்திய ஆய்வின்படி, சுமார் 2.5 லீட்டர் மிகவும் விலையுயர்ந்த நனோ உரமானது 100 கிராம் நைட்ரஜனை மட்டுமே வழங்குகிறது என்றும் “உண்மையில், ஒரு நெல் செடிக்கு குறைந்தது 50 கிலோ நைட்ரஜன் தேவைப்படுகிறது. எனவே, நனோ உரத்தை ஒரு நாளைக்கு நான்கு முறை பயன்படுத்தினாலும், ஒரு தாவரத்தின் நைட்ரஜன் தேவையை அது பூர்த்தி செய்ய முடியாது, ”என்றும் சஜித் பிரேமதாச கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது, நனோ உரங்கள் குறித்து நாட்டில் போதிய ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும், சோளம் போன்ற உயரமான பயிர்களுக்கு இந்த உரத்தைப் பயன்படுத்துவதற்கு ட்ரோன் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் பேராசிரியர் தர்மகீர்த்தி கூறியதாக எதிர் கட்சி தலைவர் கூறினார். இந்த புதிய தயாரிப்புகளால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய தீங்கு பற்றி அதிக தகவல்கள் இல்லை, மேலும் நனோ தயாரிப்புகளுக்கு SLS தரநிலையும் இல்லை. தற்போது நாட்டில் உள்ள கரிம உரங்களுக்கான தரநிலை இதற்கு பொருந்தாது” எனவும் அவர் மேலும் கூறினார்.
மேலும் கூறுகையில், ஸ்ரீ ஜெயவர்த்தனப்புர பல்கலைக்கழக வேதியியல் பேராசிரியர் எஸ்.டி.எம். சிந்தக இந்த நனோ உரமானது உரம் அல்ல, தாவர வளர்ச்சி ஊக்கி மட்டுமே எனச் சுட்டிக்காட்டியவர் எனவும் . "இந்த உரங்கள் போதுமான நைட்ரஜனை வழங்கவில்லை என்றால், அது பயனற்றது. IFFCO ஆனது மண்ணில் நைட்ரஜனை அடிப்படை உரமாக சேர்த்து பின்னர் இந்த நனோ உரத்தை சேர்க்க பரிந்துரைக்கிறது எனவும் கூறினார்.
இந்தியாவில் இந்த நனோ உரங்கள் வணிகப் பொருளாக அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலம் மட்டுமே கடந்துவிட்டது என்று கூறிய பிரேமதாசா, இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு கூட அவற்றின் தரம் பற்றி தெரியாது என்று கூறினார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பிரசன்னமாகியிருந்ததால், நனோ உரம் தொடர்பில் மேற்குறிப்பிட்ட நிபுணர்களை தொடர்பு கொண்டு விவசாயிகளுக்கு உரிய விளக்கத்தை வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.