இலங்கை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் ஆர்வமுள்ள இந்திய வணிகங்களில் ஒன்று அதானி.
வடக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டத்திற்கான ஏலச்சீட்டை எடுக்காமல் சீனா பின்வாங்குகிறது.
அரசு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி திட்டங்களுக்கான காலக்கெடுவை நீட்டிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது
வட மாகாணத்தில் ஒதுக்கப்பட்ட உத்தேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை முதலீடு செய்வதற்கும் செயல்படுத்துவதற்கும் பல இந்திய வணிகங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன. அதில் Adani Green Energy நிறுவனம் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிறுவன பிரதிநிதிகள் இந்த வாரம் கொழும்பில் அரசாங்கத்தின் மூத்த உறுப்பினர்களை சந்திக்க உள்ளனர்.
இந்நிறுவனம் இந்திய கூட்டு நிறுவனமான அதானி குழுமத்தின் ஒரு பகுதியாகும், கடந்த மாதம் கொழும்பு துறைமுகத்தில் மேற்கு கொள்கலன் முனையத்தை (WCT) கட்டமைக்க-இயக்க-பரிமாற்றம் செய்ய (BOT) $700 மில்லியன் மதிப்புள்ள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
தமிழக கடற்கரைக்கு அருகாமையில் சீனா பல திட்டங்களில் ஈடுபடுவது குறித்து கவலையடைந்த இந்தியா சீனாவை கட்டுப்படுத்துவதற்காக இலங்கையின் வட மாகாணத்தின் இந்த எரிசக்தி தொழிலில் நுழைய ஆர்வம் காட்டுகிறது.
இந்த ஒப்பந்தம் சீனாவுக்கு கிடைக்குமா அல்லது இந்தியாவிற்கு கிடைக்குமா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. எதுவாயினும் இலங்கைக்கு நன்மை நிகழ்ந்தால் சரி.