கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையத்தின் 51 வீத பங்குகளை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு வழங்குவதற்கான உடன்படிக்கை செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது.இதனையடுத்து தனிப்பட்ட விஜயமாக இலங்கை வரும் அதானி குழுமத்தின் தலைவர் கோடீஸ்வரர் கௌதம் அதானி இலங்கை ஜனாதிபதியை சந்தித்து கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனைய திட்டம் பற்றி கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.