பதிவாளர்களுக்கு பிறப்பு, இறப்பு பதிவின் போது தற்போது கிடைக்கும் 75 ருபாய் கொடுப்பனவை 150 ரூபாய் வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (26) அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிறிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
நாடளாவிய பிறப்பு, இறப்பு மற்றும் விவாக பதிவாளர் சங்கத்தின் உறுப்பினர்களுடன் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் குறிப்பிடுகையில், அலுவலக எழுது பொருட்கள் கொடுப்பனவை 500 மேலும் ரூபாய் முதல் 750 ரூபாய் வரையும் உயர்த்துவதற்கும், சேவை நிறைவின் போது 550000 ரூபாய் முதல் 5 இலட்சம் ரூபாய் வரையான பணிக்கொடை கொடுப்பனவை வழங்குவது தொடர்பில் 2022 வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழிவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பிரதமர் இதன்போது அதிகாரிகளுக்கு தெரிவித்தார்.
மேலும் பதிவாளர் பதவியை வழங்கும் போது நீதியமைச்சுடன் கலந்துரையாடி அவர்களுக்கு சமாதான நீதவான் பதவியையும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.