யாழ்.சாவகச்சோி - தனங்கிளப்பு பகுதியில் டிப்பர் வாகனமும் ஜீப் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயமடைந்து மருத்துவமனியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றிருக்கின்றது. யாழ்ப்பாணத்திலிருந்து பூநகரி நோக்கி சென்று கொண்டிருந்த ஜீப் வாகனமும், யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த டிப்பர் வாகனமும் ஜீப் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கின்றன.
மேலும் இந்த விபத்து சம்பவத்தில் 6 பேர் காயமடைந்துள்ளதுடன், காயமடைந்தவர்கள் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.