இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த விடயங்களைக் கண்டறிய இலங்கைக்குள் அலுவலகம் ஒன்றை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
ஏற்கனவே இந்தக் குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக புதிய அலுவலகம் ஒன்றைத் திறக்கவும் பிரதிநிதிகளை பணியில் சேர்ப்பதற்கும் தேவையான நிதியை ஒதுக்குவதற்கான யோசனையை, ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.