நாடளாவிய ரீதியில் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடுவது தொடர்பான தமது இறுதி தீர்மானத்தை நாளை அறிவிக்கவுள்ளதாக மின்சார சேவையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
நாளை மற்றும் நாளை மறுதினங்களில் நாட்டு மக்கள் இருளில் இருக்க நேரிடும் என மின்சார சேவையாளர்கள் சங்கம் அண்மையில் அறிவித்தது.
இந்நிலையில் மின்துண்டிப்பை மேற்கொள்ளாது தொழிற்சங்க நடவடிக்கையில் மாத்திரம் ஈடுபடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக இலங்கை மின்சார சேவையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.