web log free
January 12, 2025

பெருமையுடன் சுபீட்சத்தை நோக்கி - ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முழு தொகுப்பு

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 5 ஆம் ஆண்டு நிறைவு விழா இன்று (02) அனுஷ்டிக்கப்படுகிறது.

இதற்காக கட்சியின் தலைவர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு நெலும் பொகுண அரங்கில் விசேட மாநாடு ஒன்று நடைபெறவுள்ளது.

தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்கள் முதலில் தனது உரை மூலம் இந்நிகழ்வை இனிதே ஆரம்பித்தார். அவரது உரையில் தாங்களும் மக்களை போன்றே பால்மா இல்லாமல் தேநீர் அருந்தி மக்களின் அவல நிலையை உணர்கின்றோம் என அடித்தளமிட்டு கூறியிருந்தார். எனினும் கட்சியின் 5வது ஆண்டு விழா என்பது மிகவும் முக்கியமானது எனவே தான் விமர்சையாக செய்கிறோம் எனவும் அனைத்து கட்சி உறுப்பினர்களையும் கௌரவிக்கின்றோம் என்றும் கூறியிருந்தார்.

அதனை தொடர்ந்து இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி அதிமேதகு கோட்டபாய ராஜபக்ஷ அவர்கள் காலநிலை மாநாட்டிற்காக ஸ்கொட்லாந்து சென்றுள்ளமையினால் அவரது வாழ்த்துச்செய்தி வீடியோ வடிவில் ஒளிபரப்பப்பட்டது.

அடுத்தப்படியாக, பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர், இலங்கை நாட்டின் 5வது ஜனாதிபதி மற்றும் தற்போதைய கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தனது கட்சி உறுப்பினரை பலப்படுத்தும் விதமாகவும் மக்களை ஊக்குவிக்கும் விதமாகவும் தனது உரையை வழங்கினார்.

அவரது உரையில் குறிப்பிட்டதாவது,

பொதுமக்கள் எவரேனும் எதிலேனும் வீழ்ச்சியடைந்தால் சோர்வடையாது எமது பொது ஜன பெரமுன கட்சியை பார்த்து எவ்வாறு துளிர்வதென்று கற்றுக்கொள்ளுங்கள் எனவும் இக்கட்சியானது கட்டாயமாக வரலாற்றில் இடம் பிடிக்கும் எனவும் கூறினார்

மேலும் ஓர் அரசாங்கமானது மக்களின் குறைகளை அவர்களோடு இணைந்து கேட்டறிய வேண்டும் அவ்வாறான அரசாங்கமே தற்போதுள்ள கௌரவ கோட்டாபாய ராஜபக்ஷவின் அரசாகும். இதனை அறியாது மக்கள் நாட்டில் நிகழும் அனைத்திற்கும் அரசாங்கத்தையே குறைகூறுகின்றனர். இது எந்த வகையில் நியாயமாகும்? இதனை மக்கள் சற்று சிந்திக்க வேண்டும் எனவும் கூறினார்.

தாங்கள் தமிழ் முஸ்லீம்களை ஒருபோதும் ஒதுக்கவில்லை அனைவருக்கும் சரி உரிமை வழங்கியுள்ளோம் எனவும் கூறிய பிரதமர் கடந்த காலத்தில் நாட்டில் எங்கு பார்த்தாலும் சுவர்களில் சித்திரம் காணப்படும் அதனை தேசத்தை அழுகாக்கும் நோக்கில் இளைஞர்கள் தான் செய்தார்கள் என்பதையும் நாமறிவோம் இருப்பினும் தற்போது எங்கே அந்த துடிப்பில்ல தேசபற்று கொண்ட இளைஞர்கள்? தேடுகிறோம் நாமும் கிடைத்தப்பாடில்லை. அதனை கண்டுப்பிடியுங்கள் என கூறி தனது உரையை முடித்துக்கொண்டார்.

 

Last modified on Tuesday, 02 November 2021 07:13
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd