அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதிக்காக தேவையான டொலர் இல்லாத காரணத்தினால் சீனி, பருப்பு, உப்பு, கிழங்கு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியை நிறுத்தியுள்ளதாக அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் காரணமாக எதிர்வரும் காலங்களில் இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு ஏற்படவுள்ள தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பை யாராலும் தடுத்து நிறுத்த முடியாமல் போகுமெனவும் அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்தார்.
தற்போது டொலர் இல்லாத காரணத்தினால் 10 நாட்களாக துறைமுகத்தில் உள்ள 200 சீனி கொள்கலன்களை விடுவிக்க முடியாமல் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கொள்கலன்களுக்காக அந்நிறுவனத்திற்கு நாளாந்தம் தாமதக் கட்டணமாக 20 தொடக்கம் 35 டொலர் வரை செலுத்தவேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் ,இதனால் தற்போதைய விலையை விட 12 ரூபாவினால் சீனியின் விலை உயரும் எனவும் அவர் தெரிவித்தார்.