மட்டக்களப்பில் பொலிசாரின் அதிரடி சுற்றிவளைப்பில் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸ் அதிகாரிகள், இன்று (03) காலை நடத்திய திடீர் சுற்றிவளைப்பில் குறித்த பெண் கைது செய்யப்பட்டார்.
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுவண்கேணி பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தி நிலையத்தில் வைத்து அவர் கைதானார்.
இதன்போது , 165,000 மில்லி லீற்றர் கசிப்பு, 30,000 மில்லி லீற்றர் கோடா மற்றும் பெருமளவு கசிப்பு உற்பத்திக்குப் பயன்படுத்தும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டதாக குற்ற விசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி பி.எஸ்.பி.பணிடார தெரிவித்தார்.
மேலும் கைதான பெண், ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.