இலங்கையில் இன்று இதுவரையில் 581 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா (ShavendraSilva) தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நாட்டில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 542,793 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளைகொரோனா தொற்றில் இருந்து மேலும் 340 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு (Health Ministry of Sri Lanka) தெரிவித்துள்ளது.
இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 513,880 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,791 ஆக அதிகரித்துள்ளது