web log free
November 25, 2024

சாட்சியங்கள் மீதான விசாரணை இன்று ஆரம்பம்

அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியங்கள் மீதான விசாரணை இன்று ஆரம்பமாகவுள்ளது.

2015 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து விசாரணை செய்வதற்கு இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டது.

மகரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு ஒளடதங்களை கொள்வனவு செய்தபோது இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் குறித்து இன்றைய தினம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட உள்ளன.

இதற்கமைய, சுகாதார அமைச்சின் உதவிச் செயலாளர் ரோஹன டி சில்வாவை இன்று முற்பகல் 9.00 மணிக்கு ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற மோசடிகள் குறித்து கடந்த 19ஆம் திகதிவரை ஜனாதிபதி ஆணைக்குழு முறைப்பாடுகளை பெற்றுக்கொண்டிருந்தது.

குறித்த காலப்பகுதிக்குள் 1142 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில், அவற்றுள் 48 முறைப்பாடுகள் தொடர்பில் முதற்கட்ட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Last modified on Monday, 25 March 2019 02:56
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd