குழந்தைகள் மத்தியில் கோவிட்-19 பரவும் போக்கு மீண்டும் அதிகரித்து காணப்படுவதாக லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தைகளுக்கான ஆலோசகர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்தார்.
கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது, கோவிட்-19க்காக LRHல் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
மக்கள் சுகாதார நடைமுறைகளைப் புறக்கணித்து சுதந்திரமாக நடமாடினால் மீண்டும் பாடசாலைகளை மூட வேண்டியிருக்கும் என டாக்டர் பெரேரா தெரிவித்தார்.
“குழந்தைகள் கல்வி கற்க பள்ளிகளைத் திறந்து வைக்க வேண்டும். இந்தச் சூழ்நிலையிலிருந்து தேவையற்ற அனுகூலங்களைப் பயன்படுத்திக் கொண்டு உல்லாசப் பயணங்களுக்குச் சென்று உறவினர்களைப் பார்க்க முயன்றால், மீண்டும் நமது பள்ளிக் கல்வியை மூட வேண்டியிருக்கும். சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. பஸ்களில் மீண்டும் கூட்டம் அலைமோதுகிறது,'' என்றார். மக்கள் வீட்டிலும், வெளியில் செல்லும்போதும் சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளும் சுகாதார வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.