பதுளை - லுணுகலை, அலகொலகல பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாகவும், 16 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் இருந்த திசைவிக்கு (Router) மின்சாரம் பெற்றுக் கொள்ள முயன்ற போது மின்சாரம் தாக்கியுள்ளனது.
உடனடியாக மீட்கப்பட்டு லுணுகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.