மக்கள் பொறுப்பற்ற விதத்தில் நடந்துக்கொள்ளும் பட்சத்தில், விரும்பியோ விரும்பாலோ பயணக் கட்டுப்பாட்டை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டிய நிலைமை ஏற்படும் என சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் அசேல குணவர்தன (Dr. Asela Gunawardana) தெரிவித்துள்ளார்.
அண்மையில் கட்டுப்பாடுகளுடன் பயணத்தடை தளர்த்தப்பட்டாலும், நோய் பரவும் விதத்தில் திருமண நிகழ்வுகள், களியாட்ட நிகழ்வுகள் உட்பட வேறு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
நாட்டில் மீண்டும் கொவிட் தொற்று அதிகரிக்கப்படும் பட்சத்தில், பயணக் கட்டுப்பாடும் மீண்டும் நடைமுறைக்கு வரும் என கடும் தொனியில் அவர் கூறியுள்ளார்.