பத்தேகமவை அண்டிய பகுதிகளில் பல பாதைகள் நீரில் மூழ்கியுள்ளன. பென்தர மற்றும் மாதுறு கங்கை நீர் மட்டமும் அதிகரித்து வருகிறது. அந்த பகுதிகளில் தொடர்ந்தும் மழை பெய்து வருகிறது.
8 மாவட்டங்களிற்கு விதிக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது. பல பிரதேசங்களில் காணப்படும் வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலையால் 12 மாவட்டங்களை சேர்ந்த 4500 ற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெய்து வரும் மழையை தொடர்ந்து அநுராதபுர மாவட்டத்தில் உள்ள பெரிய அளவிலான நீர்த்தேக்கங்களின் நீர் மட்டமும் உயர்வடைந்துள்ளது.
ராஜாங்கனை, அங்கமுவ மற்றும் துருவில நீர்த்தேக்கங்கள் பெருக்கெடுத்துள்ளன. நுவரெலியா, ஹட்டன் பிரதான பாதையில் நுவரெலியா பிளக்பூல் பிரதேசத்தினூடாக செல்லும் பாதையின் மீது நேற்று மாலை பாரிய மண்திட்டு இடிந்து விழுந்ததில் அந்த பாதையில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இந்த பாதையில் வாகனம் செலுத்தும் போது கவனமாக செயற்படுமாறு பொலிசார் சாரதிகளை கேட்டுள்ளனர்.