ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு அமைச்சு பதவிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்காக சிலரது பெயர்களை, ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம், ஜனாதிபதிக்கு அனுப்பவுள்ளதாக, ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
இதேவேளை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் சிலரை அமைச்சரவை அமைச்சர்களாக நியமிக்க ஜனாதிபதி இணங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கெனவே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆறு பேர் அரசாங்கத்துக்கு ஆதரவு அளித்து வருகின்றனர்.
அவர்களில் விஜித்விஜயமுனி சொய்சா, பியசேன கமகே, லக்ஸ்மன் செனிவிரத்ன, ஏ.எச்.எம்.பௌசி ஆகியோரே அமைச்சர்களாக நியமிக்கப் பரிந்துரைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய அரசாங்கம் என்ற அடிப்படையில், அமைச்சரவை அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதுடன், கடந்த காலங்களில் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கு எதிர்ப்புகள் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.