web log free
April 06, 2026

நான்கு மணி நேர மின்வெட்டு


இன்று தொடக்கம் நாடாளாவிய ரீதியில் நான்கு மணி நேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது.

வரட்சியால் நீர்மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று தொடக்கம் அதிகாரபூர்வமாக 4 மணி நேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

இந்த மின்வெட்டு பகலில் 3 மணி நேரமும், இரவில் 1 மணி நேரமும் மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, காலை 08.30 தொடக்கம் 11.30 வரையும், முற்பகல் 11.30 தொடக்கம் பிற்பகல் 02.30 வரையும் மின்சார துண்டிப்பு இடம்பெறும்.

அத்துடன், மாலை 06.30 தொடக்கம் 07.30 வரையும் மாலை 07.30 தொடக்கம் இரவு 08.30 வரையும் மின்சார துண்டிப்பு இடம்பெறும் என, மினசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டின் பிரதான நீர்மின் உற்பத்தி நிலையங்களுக்கு நீரை வழங்கும் நீர்த்தேக்கங்களில் நீர் வரவு குறைந்துள்ளதை அடுத்து, மின்சார உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளமை காரணமாக மின் தடை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd