நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையை அடுத்து இயற்கையாகவே உடைப்பெடுத்து நந்திக்கடல் நீர் பெருங்கடலுடன் இணைந்துள்ளது.
தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாகவே நந்திக்கடலுக்கும், பெருங்கடலுக்கும் இடையில் காணப்படுகின்ற மணல் திடல் உடைப்பெடுத்து பெருங்கடலுடன் நீர் இணைந்துள்ளது.
இரண்டு நாட்களாக கடும் மழை பெய்வரும் நிலையில் நேற்றைய தினம் நந்திக்கடலினை அண்டியிருந்த வயல் நிலங்கள் நீரில் மூழ்கியதுடன், வட்டுவாகல் பாலத்திற்கு மேல் நந்திக்கடலின் நீர்மட்டம் உயர்வடைந்திருந்ததால், வட்டுவாகல் பாலத்தினால் போக்குவரத்தில் ஈடுபடுபவர்கள் பலத்த இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்திருந்தனர் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தநிலையில் நேற்று இரவு நந்திக்கடல் இயற்கையாகவே, உடைப்பெடுத்து பெருங்கடலுடன் கலந்துள்ளது.
முன்னதாக நந்திக்கடல் நீரை பெருங்கடலுடன் இணைத்து நந்திக்கடலின் நீர்மட்டத்தை குறைக்குமாறு விவசாயிகளும், வட்டுவாகல் பகுதி மக்களும் உரியவர்களிடம் கோரிக்கைவிட இருந்தனர். எனினும், நத்திக்கடல் இயற்கையாவே பெருங்கடலுடன் நேற்று இரவு சங்கமித்துள்ளதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.