web log free
March 28, 2026

பல்கலைக்கழக மாணவர்களுக்கான அறிவித்தல்

பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கான இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டம் நாளை (11) முதல் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஆரம்பமாக உள்ளது. இது தொடர்ந்தும் 12 மற்றும் 15ம் திகதிகளிலும் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நல்லூர் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினரால் தடுப்பூசி செலுத்தப்படும் தினங்களில் முற்பகல் 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 வரை யாழ்ப்பாண பல்கலைக்கழக சுகநல நிலையத்தில் தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளன.

ஒக்டோபர் மாதம் சினோபார்ம் முதலாவது டோஸ் தடுப்பூசியை பெற்ற பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மட்டுமே இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தடுப்பூசி ஏற்ற வரும் போது தடுப்பூசி அட்டை , தேசிய அடையாள அட்டை, பல்கலைக்கழக அடையாள அட்டை ஆகியவற்றைக் கொண்டு வருமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd