கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி தலவாக்கலை நகரில் அமைந்துள்ள இந்து ஆலயம் ஒன்றின் சூரன் போர் நேற்று நகரின் மையப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சூரன் போரில் பெரும் திரளானக மக்கள் கலந்து கொண்ட நிலையில், விழா நடத்தக் கோயில் நிர்வாகம் சுகாதாரத்துறையிடம் எந்த அனுமதியும் பெறவில்லை என தெரியவந்துள்ளது.
இதேவேளை அண்மைக்காலமாக தலவாக்கலை பிரதேசத்தில் அதிகளவான கொ ரோனா தொற்றுக்குள்ளானவர்கள் கண்டறியப்பட்டனர்.
அதோடு தல வாக்கலை பிரதேசத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், மீண்டும் இவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறுகின்றமை மக்களுக்கு பெரும் ஆபத்தானதாக மாறலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் சமூக பொறுப்பின்றி மக்கள் இவ்வாறு நடந்துகொண்டமை கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.