web log free
January 12, 2025

முட்டாள் தனத்தின் உச்சத்தில் வௌ்ள நீரில் பாயும் இளைஞர்கள்

அலவ்வ பழைய பாலத்தில் இருந்து மஹா ஓயா வௌ்ள நீரில் பாயும் சிலர் குறித்த காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

இதில் சிலர் பாலத்தின் பாதுகாப்பு கம்பின் மேல் இருந்து இவ்வாறு வௌ்ள நீரில் பாயும் காட்சி பதிவாகி உள்ளது.

குறித்த நபர்கள் தொடர்பிலோ அல்லதுஞ குறித்த சம்பவம் தொடர்பிலோ உறுதியான தகவல்கள் கிடைக்கப்பெறாத நிலையில், குறித்த நபர்கள் மஹா ஓயாவின் கரையை நோக்கி நீந்திச் செல்வது குறித்த காணொளியில் பதிவாகி உள்ளது.

எனினும் மோசமான வானிலை காரணமாக ஏற்கனவே பல உயிர்கள் பலியாகியுள்ள சூழலில் உயிரைப் பணயம் வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாத செயலாகும்.

பல்வேறு நாடுகளில் இதுபோன்ற பாரதூரமான செயல்களை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம், அங்கு அவர்கள் உயிர்காக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு இதனை செய்கின்றனர்.

இந்த பாரதூரமான அனுபவங்களை எதிர்கொள்வது அவர்களது திறமையா ? அல்லது அது அவர்களின் முட்டாள்தனமா? என்பதை நீங்களே தீர்மானியுங்கள்....

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd