கர்நாடக சங்கீதம் என்ற துறைக்கு பெருமை தேடித்தந்த தமிழ் ஆசிரியையை பாராட்டி அவரை பற்றி புத்தகம் ஒன்றை அவரது சிங்கள மாணவன் ஒருவர் எழுதியுள்ளார்.
2019 ஆம் ஆண்டுக்கான "வானொலி அரச விருது" விழாவில் "பிரதிபா பிரணாம" என்ற விருதுக்கு சொந்தமான DR. அருந்ததி ஸ்ரீ ரங்கநாதன் என்ற அரு ஸ்ரீ ஆர்ட் தியேட்டரின் நிறுவனரே கர்நாடக இசையின் பெருமையை நிலைநிறுத்திய இந்த தமிழ் ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் மூத்த ஒளிபரப்பாளர், புகழ்பெற்ற இசையமைப்பாளர், நடன இயக்குனர், ஊடக ஆலோசகர், நிறுவனர் மற்றும் கலை இயக்குனர் என பல பரிமாணங்களை கொண்டவர்.
டாக்டர் அருந்ததி ஸ்ரீ ரங்கநாதன் பற்றிய சிறப்பு புத்தகத்தை கொழும்பில் உள்ள தென்னிந்திய இசைத்துறை பல்கலைக் கழகத் தலைவர் DR நிஷ்ஷங்க அபேரத்னா என்றவரே எழுதியுள்ளார்.
இவருக்கான புத்தகம் வெளியீட்டு விழா நாளை Zoom ஊடாக மாலை 6 மணியளவில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த ஆசிரியரை Dr.L.சுப்பிரமணியம் என்ற பிரபல வயலின் கலைஞர் மற்றும் Dr.ராதிகா குமாரசாமி ஆகியோரும் வாழ்தியுள்ளனர்.