சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல விடுத்த கோரிக்கையை ஜனாதிபதி நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் விஜித் குணசேகரவின் பெயரை மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி பதவிக்கு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பரிந்துரைத்துள்ளார்.
எனினும் ஜனாதிபதி அந்த பிரேரணையை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் ஜனாதிபதி மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி பதவிக்கு டாக்டர் சவின் சமேகேவை நியமித்தார்.
திரு. சமேகே இராணுவ மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளராகவும், தடுப்பூசித் திட்டத்தின் பொறுப்பாளராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளராக கலாநிதி டி.எஸ்.சமரசிங்கவை ஜனாதிபதி நியமித்துள்ளார்.