இலங்கை காவல்துறை வரலாற்றில் இரண்டாவது முறையாக, புதிய காவல் நிலையத்தின் பொறுப்பதிகாரியாக (OIC) பெண் தலைமைப் பரிசோதகர் திருமதி எஸ்.எம்.ஐ. காஞ்சனா சமரகோன் கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.
கம்பஹா நல்ல பொலிஸ் நிலையத்தின் OIC ஆக கடமைகளை ஏற்ற காஞ்சனா சமரகோனின் கணவரும் சிறிலங்கா காவல்துறையின் அமைச்சுப் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றினார். இரண்டு பிள்ளைகளின் தாயான காஞ்சனா சமரகோன் 1997 ஆம் ஆண்டு இலங்கை காவல்துறையில் மகளிர் உப பொலிஸ் பரிசோதகராக இணைந்து கொண்டதுடன், சிலாபம், வவுனியா, கம்பஹா, மீரிகம, நிட்டம்புவ மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் உட்பட பல பிரிவுகளில் கடமையாற்றியுள்ளார். ஹெம்மாதகமையில் பிறந்த இவர் கேகாலை பாலிகா மகா வித்தியாலயத்தின் பழைய மாணவியாவார்.