web log free
January 12, 2025

கொழும்பு - கண்டி வீதியில் மண்சரிவு

கொழும்பு - கண்டி வீதியில் 98 வது கிலோ மீற்றர் கீழ் கடுகன்னாவ வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனமும் வீதி அபிவிருத்தி அதிகார சபையும் களப்பரிசோதனை செய்து வீதி பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சீரற்ற வானிலை காரணமாக மூடப்பட்டிருந்த கொழும்பு - கண்டி வீதியின் 98 வது கிலோமீற்றர் மைல்கட்டை பகுதியில் கீழ் கடுகன்னாவ பகுதி மீள அறிவிக்கும் வரையில் மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எனவே, போக்குரவரத்து தடையை தடுப்பதற்கு பின்வரும் மாற்று வழிகளைப் பயன்படுத்த முடியும். அதற்குத் தேவையான வழிகாட்டல்களை இலங்கை பொலிஸாரும் வீதி அபிவிருத்தி அதிகார சபையும் வழங்கி வருகிறது.

 இதேவேளை, அப்பகுதியில் உள்ள பெரிய மரங்களை வெட்டவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், வீதி அபிவிருத்தி அதிகார சபை, பொலிஸ், அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகள், பிரதேச செயலாளர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து வீதியை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக கேகாலை பிரதேச செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய மேலும் தெரிவித்தார்.

 

Last modified on Friday, 12 November 2021 09:01
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd