web log free
January 12, 2025

பிரபல சிகை அலங்கார நிறுவன உரிமையாளர் கொலை

கொழும்பில் பிரபல சிகை அலங்கார நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவர் தாக்குதல் சம்பவம் ஒன்றில் உயிரிழந்துள்ளார்.

அனுராதபுரம், எலயாபத்து பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரின் வீட்டுக்கு சென்றுள்ள நிலையில், அந்த பெண்ணின் சகோதரனுடன் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட மோதல் காரணமாக கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட பெண்ணின் தாய், குறித்த நபர் எங்கள் மகளுடன் வீட்டிற்கு வெளியே உரையாடிக் கொண்டிருந்த போது திடீரென என்னை காப்பாற்றுங்கள் என மகள் கூச்சலிட்டார். உடனடியாக அந்த இடத்திற்கு சென்று மகளை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டோம். சிறிது நேரத்தின் பின்னர் வெளியே சென்று பார்க்கும் போது சிகை அலங்கார உரிமையாளர் கீழே விழுந்து கிடந்தார் என குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நபர் கூர்மையான ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்ட உயிரிழந்தமை தொடர்பில் சந்தேக நபரான பெண்ணின் சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் சிகை அலங்கார நிலையத்தின் உரிமையாளர் தனது மனைவியின் பிறந்த நாளுக்கு பென்ஸ் ரக கார் ஒன்று பரிசாக வழங்கியதன் மூலம் சமூக வலைத்தளத்தில் மிகவும் பிரபலமான ஒருவராக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Last modified on Friday, 12 November 2021 09:28
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd