web log free
February 01, 2026

அந்தமான் தீவில் நிலைக்கொண்ட தாழமுக்கம் இலங்கையை தாக்குமா?

தென் அந்தமான் தீவுக்கு அண்மையாகவுள்ள கடற்பரப்புகளுக்கு மேலாக புதிதாக ஒரு தாழமுக்க பிரதேசம் உருவாகக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாளைய தினமாகும்போது இத் தாழமுக்கம் வலுவடையலாம் எனவும் கூறப்படுகிறது.

புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் உள்ளது எனவும், நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆகையினால், நாட்டிற்கு கிழக்காக உள்ள ஆழ்கடல் பகுதிகளில் கடலில் பயணம் செய்வோரும், மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd