web log free
January 12, 2025

கெரவலபிட்டிய ஒப்பந்தம் தொடர்பில் சட்டமா அதிபரால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை!

யுகதனவி மின்னுற்பத்தி நிலைய ஒப்பந்தம் தொடர்பில்  உயர்நீதிமன்றத்திடம் சட்டமா அதிபர் கோரிக்கை ஒன்றை முன்வைத்தள்ளார்.

இன்று  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும்  தெரியவருகையில்,

யுகதனவி மின்னுற்பத்தி நிலைய ஒப்பந்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுவை பூரண நீதியரசர்கள் ஆயத்தின் முன்நிலையில் விசாரிக்குமாறு சட்டமா அதிபரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் சார்ப்பில் முன்னிலையான மேலதிக சொலிஸிட்டர் ஜெனரல் பர்ஷான ஜமீலினால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

கெரவலப்பிட்டிய யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்குவது தொடர்பான அமைச்சரவையின் தீர்மானத்தைச் சவாலுக்கு உட்படுத்தும் வகையில் மனுக்கல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் எல்லே குணவங்ச தேரர் ஆகியோர் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவை தாக்கல் செய்திருந்தனர். அதன் பின்னர், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Last modified on Friday, 12 November 2021 11:16
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd