பெண் ஒருவரின் கையடக்கத் தொலைபேசிக்கு தொடர்ச்சியாக அந்தரங்க புகைப்படங்களை அனுப்பி வந்த நபர் ஒருவர் கஹவத்தை பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தனது கையடக்கத் தொலைபேசிக்கு அவருடைய அந்தரங்க புகைப்படங்களை அனுப்புவதாகக் கூறி குறித்த பெண் முறைப்பாடு செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்
முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, 40 வயதுடைய திருமணமான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
முதற்கட்ட விசாரணையில், அந்த நபர் பல்வேறு சமூக ஊடக தளங்கள் மூலம் பல பெண்களுக்கு தன்னுடைய அந்தரங்க படங்களை அனுப்பியதாக தெரியவந்துள்ளது.
இவர் சிம் கார்டுகளை வாங்குவதற்காக பல நபர்களின் தேசிய அடையாள அட்டையின் படங்களையும் பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் சந்தேகநபரிடம் இருந்து 107 சிம்கார்டுகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேகநபர் இன்று தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.