உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசித் திகதி இம்மாதம் 20ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச இசட் சித்திகளை வழங்கியதன் பின்னர் பல்கலைக்கழக அனுமதியை இழந்த பெருமளவிலான மாணவர்களின் கோரிக்கையின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
http://www.onlineexams.gov.lk/eic
பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk ஆகியவற்றிற்குச் சென்று விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சாதாரண தரப் பரீட்சையின் அழகியல் தொடர்பான நடைமுறைப் பரீட்சைகள் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் பதினொரு திகதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.