யாழ்ப்பாணம் - கொழும்பு இடையிலான ரயில் சேவைகள் இன்று இடை நிறுத்தப்படுவதாக ரயில் திணைக்கள பொதுமுகாமையாளர் அறிவித்துள்ளார்.
அதன்படி வடமாகாணத்திற்கான அனைத்து தொடருந்து சேவைகளும் இன்று இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கொழும்பு – காங்கேசன்துறை இடையே இன்று மூன்று தொடருந்து சேவைகள் இடம்பெறவிருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாட்டில் பெய்த அடைமழை காரணமாக விஜய ரஜதஹன மற்றும் மீரிகமை ரயில் நிலையங்களுக்கு இடையில், வெள்ளம் காரணமாக ரயில் பாதையில் தாழிறக்கம் ஏற்பட்டுள்ளது.
ரயில் சேவைகள் இன்று இடை நிறுத்தப்படுவதற்கு இதுவே காரணம் எனவும் கூறப்படுகிறது.