நாட்டில் மரக்கறிகளின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ள நிலையில் நுகர்வோர் மற்றும் வியாபாரிகள் பலத்த அசெளகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.
அதன்படி நுவரெலியா வாராந்த சந்தையில் மலையக மற்றும் கீழ்நாட்டு மரக்கறிகள் ஒரு கிலோ 400 ரூபாவுக்கு விற்பனையாகும் அதேவேளை ஒரு கிலோ தக்காளி 600 ரூபாவுக்கும் அதிகமாகவும், ஈரப்பலா ஒன்று 200 ரூபாவுக்கு விற்பனையாகிறது.
இந்நிலையில் நுவரெலியா வாராந்த சந்தையில் மரக்கறிகளின் விலை அதிகரிப்பால் வியாபார நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை கடந்த சில வாரங்களில் மரக்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், மரக்கறிகளின் விலைகள் மேலும் அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.