web log free
January 12, 2025

குற்றப்புலனாய்வுத்துறையில் வாக்குமூலம் வழங்கும் அருட்தந்தை சிறில் காமினி

அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ, இன்று குற்றப்புலனாய்வுத்துறைக்கு சென்று வாக்குமூலம் வழங்குவார் என கொழும்பு மறைமாவட்ட சமூக உறவுப் பிரிவின் தலைவர் அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த நேற்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விடயத்தில், அரசப் புலனாய்வு பிரிவின் தலைவர் தொடர்பாக வெளியிட்ட சர்ச்சைக்குரிய தகவலை மையப்படுத்தி வாக்குமூலம் வழங்குவதற்காக அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ (Cyril Gamini) இன்று காலை குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு சென்றுள்ளார்.

இந்தநிலையில் ஏற்கனவே தம்மை கைது செய்வதற்கு தடை விதிக்குமாறு கோரி அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ, உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்த நிலையில் நீதிமன்றத்துக்கு அறிவிப்பு விடுத்திருந்த குற்றப்புலனாய்வுப்பிரிவினர், தற்போதைக்கு அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோவை கைது செய்யப் போவதில்லை என்றும் தெரிவித்திருந்தனர்.

அரச புலனாய்வுத் தலைவர் சுரேஷ் சாலி மேற்கொண்ட முறைப்பாட்டை அடுத்தே, அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ, வாக்குமூலம் வழங்க அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd