சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை குறைந்தது 50 நாட்களுக்கு மூட தீர்மானித்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அந்நிய செலாவணி பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து மசக்கு எண்ணெய் நாட்டிற்கு கிடைக்கும் வரையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.