இரண்டு வாரங்களுக்குள் அரச ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்காவிடின் அறிவிக்கப்படாத தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக இலங்கை அரச உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க சம்மேளனம் ஐனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வரவு செலவு திட்டத்தின் மூலம் அரச ஊழியர்களுக்கு பதினெட்டாயிரம் ரூபாய் சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என இலங்கை அரச உத்தியோகத்தர்களின் தொழிற்சங்க சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் பி.ஏ.பி பஸ்நாயக்க கையொப்பமிட்ட கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.