இன்றைய காலகட்டத்தில் விவசாயிகள், அரச உத்தியோகத்தர்கள்,கைவினைஞர்கள் அனைத்து மக்களும் அரசிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை செய்கின்றனர். அதற்கு இந்த அரசாங்கம் பொலிசாரை பயன்படுத்தி மக்களை மிரட்டி அசௌகரியங்களுக்கு உள்ளாக்குகின்றனர். இந்த அரசாங்கம் மக்களுக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் பயந்து உள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஆர். ரஞ்சித் மத்தும பண்டார அவர்கள் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
மேலும், நேற்றைய தினம் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்த இளைஞனை எம்பிலிபிடிய பணாமுற பொலிஸார் தாக்கியதில் அந்த சிறுவன் உயிரிழந்துள்ளார் என்பதையும் அங்கு நினைவூட்டினார்.
மேலும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பதாகைகள் ஏந்திய வண்ணம் பாராளுமன்றத்தினுள் கோஷங்களை எழுப்பினர்.
இந்த அரசாங்கம் நாட்டை விற்று தரகு பணம் வாங்குகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.