சாரதி அனுமதி எழுத்துமூல பரீட்சையில் திடீர் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
வாகன சாரதி அனுமதி பத்திரத்திற்கான எழுத்துமூல பரீட்சையை, பரீட்சைத் திணைக்களத்தின் கண்காணிப்பின் கீழ் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த புதிய திட்டத்தின் கீழ், சாரதி அனுமதி பத்திரத்திற்கான பரீட்சைகளில் தோற்றும் பரீட்சார்த்திகளுக்கு, தமது பிரதேசத்திலேயே பரீட்சைகளை எழுதுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் என மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் கூறுகின்றது.
எதிர்வரும் ஆண்டு முதல் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.