மக்களின் காணிகளை எல்லைகள் போட்டு பறிப்பது கண்டிக்கத்தக்கது. இந்த வரவு செலவுத்திட்டத்தில் மீனவர் சமுதாயத்திற்கு எந்த பெரிய அளவிலான நிதியும் ஒதுக்கப்படவில்லை. இலங்கையில் வருமானத்தை ஈட்டக் கூடிய மீன்பிடி சமுதாயம், மலையக சமுதாயம் மற்றும் விவசாய சமுதாயம் இடையே இந்த அரசாங்கம் பாரபட்சம் பார்க்கிறது. இன்றைய காலகட்டத்தில் கல்வி செயற்பாடுகள் zoom தொழில்நுட்பத்தின் ஊடாக நடைபெறுகின்றன. இருப்பினும் தொலைத்தொடர்பு சாதனங்களின் விலை உச்சத்தை அடைகிறது. சாதாரண கூலி வேலை செய்யும் குடும்பம் எவ்வாறு இக்காலத்தில் கல்வியை தொடரும் என்பது கேள்விக்குறியாக உள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இன்று கூடிய பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
AsianMirrorTamil : YouTube